உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / துரந்தர் 2 : ஓடிடி வெளியீடு இரண்டு வாரம் தள்ளி வைப்பு

துரந்தர் 2 : ஓடிடி வெளியீடு இரண்டு வாரம் தள்ளி வைப்பு

ஹிந்தித் திரையுலகத்தில் வெளியாகும் புதிய படங்கள் ஓடிடி தளங்களில் 8 வாரங்களுக்குப் பிறகே வெளியாகும். ஆனால், 'துரந்தர் 2' படத்தை மேலும் இரண்டு வாரங்களுக்குப் பிறகே வெளியிட உள்ளார்கள்.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அதன் உரிமையைப் பெற்றுள்ள ஜியோ ஹாட்ஸ்டார் நேற்று வெளியிட்டது. அதன்படி ஜுன் 4ம் தேதி இரவு 7 மணிக்கு இப்படத்தை ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார்கள்.

அதேசமயம், இப்படத்தை இந்தியா தவிர வெளிநாடுகளில் நேற்று வெளியிட்டுள்ளார்கள். நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் இப்படத்தின் வெளிநாட்டு ஓடிடி உரிமையைப் பெற்றுள்ளது.

பாகிஸ்தானில் இப்படத்தைப் பார்க்க ஒரே நேரத்தில் பல ரசிகர்கள் முயற்சித்துள்ளார்கள். அதனால் நெட்பிளிக்ஸ் சர்வர் ஸ்தம்பித்துவிட்டது என ரசிகர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

இந்தியாவில் இப்படத்தைப் பார்க்க இன்னும் இரண்டு வாரங்கள் காத்திருக்க வேண்டும் என்பது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !