ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் எதிர்பாராமல் நிவின்பாலி குடும்பத்தை சந்தித்த ஷோபனா
ADDED : 1 days ago
நடிகர் நிவின்பாலி நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான “சர்வம் மாயா” திரைப்படம் வெற்றியை பெற்றது. அதனைத் தொடர்ந்து “பேபி கேர்ள்” என்கிற திரைப்படமும் வெளியானது. தற்போது கோடை விடுமுறையை கழிப்பதற்காக ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன் நகரில் தனது குடும்பத்துடன் முகாமிட்டுள்ளார் நிவின்பாலி.
அதுமட்டுமல்ல, நடிகை ஷோபனாவும் தற்போது ஆஸ்திரேலியாவில்தான் தனது விடுமுறையை கழித்து வருகிறார். பிரிஸ்பேன் நகரில் உள்ள சாலை ஒன்றில் எதிர்பாராத விதமாக நிவின்பாலி மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்துள்ளார் ஷோபனா. உடனடியாக அவர்களுடன் செல்பி வீடியோ எடுத்து, அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்து கொண்டு அவர்களை சந்தித்த மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டுள்ளார் ஷோபனா..