உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மஞ்சு மனோஜ் நடிக்கும் 'வட்டி காசுல வாடா'

மஞ்சு மனோஜ் நடிக்கும் 'வட்டி காசுல வாடா'


தெலுங்கு திரையுலகில் பிரபல சீனியர் நடிகரான மோகன்பாபுவின் மகன்களான விஷ்ணு மஞ்சு, மஞ்சு மனோஜ் மற்றும் மகள் லட்சுமி மஞ்சு ஆகியோர் சினிமாவில் நடித்து வருகின்றனர். இதில் மஞ்சு மனோஜ் தனது தந்தை மற்றும் சகோதரருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கடந்த வருடம் அவர்களுடன் மோதலில் ஈடுபட்டு பரபரப்பு செய்திகளில் இடம்பிடித்தார். 2018-க்கு பிறகு கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் படங்களில் நடிக்காமல் இருந்த அவர், கடந்த வருடம் வெளியான “மிராய்” மற்றும் “பைரவம்” படங்களின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். இந்த நிலையில் சமீபத்தில் அவரது பிறந்த நாளை முன்னிட்டு, அவர் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது.

இந்த படத்திற்கு “வட்டி காசுல வாடா” என வித்தியாசமாக டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. டைட்டிலுக்கு ஏற்றபடி, கடன் வாங்கும் நடுத்தர குடும்பத்தினர் தவணை கட்ட முடியாமல், கடனை திருப்பி அடைக்க முடியாமல் எந்தவிதமான பொருளாதார அழுத்தங்களுக்கு ஆளாகிறார்கள் என்பதை மையப்படுத்தி, அதேசமயம் நகைச்சுவையாக இந்த படம் உருவாக இருக்கிறதாம். தேஜ் உப்பலபாடி என்பவர் இந்த படத்தை இயக்குகிறார். மஞ்சு மனோஜ் தனது கடன் சுமை குறித்து கடவுளிடம் புலம்புவது போல இது குறித்த கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !