உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தீபாவளி தேதியை குறிவைத்த அரசன்

தீபாவளி தேதியை குறிவைத்த அரசன்

எஸ் தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் 'அரசன்' படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்கள் தவிர்த்து பிரியங்கா மோகன், விக்ராந்த், டிஜே அருணாசலம், யோகலஷ்மி, மாஸ்டர் கமலேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரகனி உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். வட சென்னை பின்னணியில் இதன் கதைக்களம் நகருகிறது. இதுவரை இந்த படம் கோவில்பட்டி மற்றும் சென்னையில் படப்பிடிப்பு நடந்து வந்தது. இப்போது இந்த படப்பிடிப்பு பணிகளில் இன்னும் வேகம் எடுத்துள்ளனர். இதற்கு காரணமாக அரசன் படத்தை இவ்வருட தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு கொண்டு வர வேண்டும் என்கிற குறிக்கோள் உடன் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே திட்டமிட்ட காலத்தை விட வேகமாக முடிக்கும் நோக்கில் படக்குழுவினர் இரவு, பகலாக பணி செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !