மீண்டும் இணையும் எப்.ஐ.ஆர் பட கூட்டணி
ADDED : 3 hours ago
எப்.ஐ.ஆர், மிஸ்டர்.எக்ஸ் ஆகிய படங்களை இயக்கியவர் மனு ஆனந்த். இதில் மிஸ்டர்.எக்ஸ் படம் தோல்வியாக அமைந்தது. சமீபத்தில் மனு ஆனந்த், நடிகர் விக்ரமிற்கு ஒரு மூன்று பாகங்கள் கொண்ட படத்தின் கதையை கூறியுள்ளார். இந்த கதை விக்ரமிற்கு பிடித்துள்ளதால் திரைக்கதை எழுத கூறியுள்ளார். மிகப்பெரிய பொருட்செலவு இந்த கதைக்கு தேவைப்படுகிறது. ஆனால், இந்த அளவிற்கு முதலீடு செய்ய சரியான தயாரிப்பாளரை தேடி வருகின்றனர். இதனால் படம் துவங்க தாமதம் ஆகலாம் என்பதை புரிந்து கொண்ட மனு ஆனந்த் தற்போது வேறு ஒரு கதையை தயார் செய்துள்ளார். இந்த கதையை தனது முதல்பட (எப்ஐஆர்) ஹீரோவான விஷ்ணு விஷாலிடம் கூறியுள்ளார். அவருக்கும் கதை பிடித்துள்ளதாம். இதை தானே தயாரித்து, நடிக்கலாம் என திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.