உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தனுஷ், மிருணாள் தாக்கூர் படம் தள்ளிப்போகிறது

தனுஷ், மிருணாள் தாக்கூர் படம் தள்ளிப்போகிறது

நடிகர் தனுஷ், இயக்குனராக பா.பாண்டி, ராயன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம், இட்லி கடை ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இதையடுத்து அடுத்து ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார் தனுஷ். அதில் நடிகை மிருணாள் தாக்கூரை முதன்மை கதாபாத்திரத்தில் வைத்து தயாரித்து, இயக்கவுள்ளார் . இந்த படம் 60-70 காலகட்டத்தில் பீரியட் படமாக உருவாகிறது. இதன் படப்பிடிப்பை ஜூன் மாதத்தில் தொடங்க திட்டமிட்டிருந்தனர். ஏற்கனவே இதற்கான போட்டோ ஷூட் எல்லாம் நடைபெற்றது.

ஆனால் இப்போது இதன் படப்பிடிப்பு தள்ளிப் போகிறது. தற்போது தனுஷ் ஒரு நடிகராக ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ளதால் மிருணாள் தாக்கூரை வைத்து படம் இயக்க முடியாத சூழல் உள்ளது. அதனால் கைவசம் உள்ள சில முக்கிய படங்கள் நடித்து முடித்த பிறகு மீண்டும் இயக்க பணிக்கு திரும்பலாம் என முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !