ரிலீசுக்கு தயாரான ரோபோ சங்கர் நாயகனாக நடித்த கடைசி படம்
ADDED : 140 days ago
சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்தவர் ரோபோ சங்கர். காமெடியானாக ஏராளமான படங்களில் நடித்துள்ள அவர் கடைசியாக கதை நாயகனாக நடித்த படம் 'ஈகோ ராமன்'.
இதில் அவருடன் சிபி புவனச்சந்திரன், கீர்த்தனா, கவிதா ரமேஷ், சப்பாணி முரளி, சேரன் ராஜ், லதா நடித்துள்ளனர். அஸ்ருதா புரொடக்ஷன்ஸ் சுதா.ஜி தயாரிக்கிறார். கணேசன் நாச்சிமுத்து எழுதி இயக்கி இருக்கிறார்.ரெய்மன் ராட்ரிக்ஸ் இசை அமைத்துள்ளார்.
கோவை மற்றும் பொள்ளாச்சியில் படப்பிடிப்பு நடந்துள்ளது. இம்மாத இறுதியில் உத்ரா புரொடக்ஷன்ஸ் படத்தை வெளியிடுகிறது. ஒரு மாணவனின் வாழ்க்கைக்காக போராடும் ஆசிரியரின் கதை. இதில் ஆசிரியராக ரோபோ சங்கர் நடித்துள்ளார்.