உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : தியேட்டரில் வெளியாகாத பாலுமகேந்திரா படம்

பிளாஷ்பேக் : தியேட்டரில் வெளியாகாத பாலுமகேந்திரா படம்

1989ம் ஆண்டு பாலு மகேந்திராவால் தயாரிக்கப்பட்டு, எழுதப்பட்டு, இயக்கப்பட்ட படம் 'சந்தியாராகம்'. அர்ச்சனா, சொக்கலிங்க பாகவதர் மற்றும் ஓவியர் சந்தானம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கருப்பு வெள்ளையில் படமாக்கப்பட்ட இத்திரைப்படத்திற்கு பாலுமகேந்திராவே ஒளிப்பதிவு செய்து படத்தொகுப்பும் செய்தார். 37வது தேசிய திரைப்பட விருதுகளில், இது குடும்ப நலன் குறித்த சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றது.

5 லட்சம் ரூபாயில் தயாரான இந்த படத்தில் அர்ச்சனா சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்தார். பிற்காலத்தில் இதன் நெகட்டிவ் காணாமல் போய்விட்டது. தூர்தர்ஷன் இந்த படத்தின் உரிமத்தை வாங்கி 100 முறைக்கு மேல் ஒளிபரப்பியது. இதன் டிஜிட்டல் காப்பி தூர்தர்ஷனிலும், புனே சினிமா ஆவண காப்பகத்திலும் இருக்கிறது. இந்த படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை.

மனைவியை இழந்த 80 வயது முதியவர் கிராமத்தில் இருந்து நகரத்தில் உள்ள தம்பி மகன் வீட்டுக்கு வருவதும், அவர் சந்திக்கும் பிரச்னைகளும் தான் படத்தின் கதை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !