உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரிலீஸூக்கு தயாராகும் சர்வர் சுந்தரம்?

ரிலீஸூக்கு தயாராகும் சர்வர் சுந்தரம்?

ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் கடந்த 2016ம் ஆண்டில் ரிலீஸூக்கு தயாரான படம் 'சர்வர் சுந்தரம்'. அந்தசமயம் இந்த படத்தின் மீது பல கடன்கள் இருந்ததால் ரிலீஸ் ஆகவில்லை. கடனை தீர்க்க 9 வருடங்களாக இதன் தயாரிப்பாளர் போராடி வருகிறார்.

சமீபத்தில் இந்த பொங்கல் வெளியீட்டில் இருந்து ஜனநாயகன் விலகியதால் சர்வர் சுந்தரம் படத்தின் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை ஜனவரி 14ம் தேதியன்று திரைக்கு கொண்டு வருவதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் சர்வர் சுந்தரம் விரைவில் திரைக்கு வருவதற்கான சாத்தியக்கூறுகள் தெரிகிறது. ஏனெனில், சந்தானம் தற்போது ஏஜிஎஸ் நிறுவன தயாரிப்பில் 'லவ் பைட்' எனும் படத்தில் நடித்து வருகிறார். சந்தானம், ஏஜிஎஸ் நிறுவனத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில் சர்வம் சுந்தரம் படத்தை திரையரங்குகளில் வெளியிடும் விநியோகம் பொறுப்பை ஏஜிஎஸ் நிறுவனம் கையில் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !