வாசகர்கள் கருத்துகள் (1)
மேடத்துக்கு தமிழ்நாட்டுக்கு கோவில்கள் என்றால்தான் பிடிக்காது. மற்ற மாநிலக் கோவில்கள் என்றால் எந்தப் பிரச்சினையும் இல்லை. தமிழகக் கோவில்களை மட்டுமே கேவலமாக பேசும் இந்த ஒட்டு மொத்தக் குடும்பம்
நடிகை ஜோதிகா தனது செகண்ட் இன்னிங்ஸில் தமிழில் சில படங்களில் கதையின் நாயகியாக நடித்தார். அதன்பிறகு தமிழில் நடிப்பதை குறைத்துக் கொண்டு தற்போது மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். அந்த வகையில் ஹிந்தி படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வரும் ஜோதிகா நடிப்பில் சமீபத்தில் சிஸ்டம் என்கிற திரைப்படம் நேரடியாக அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது. அஸ்வினி ஐயர் திவாரி இயக்கிய இந்த படம் ஒரு கோர்ட் ரூம் டிராமாவாக உருவாகி இருந்தது. ஓடிடியில் வெளியானாலும் இப்படத்திற்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளதாம்.
இந்த நிலையில் அந்த வெற்றியை உறுதிப்படுத்தும் விதமாக ஜோதிகா, படத்தின் இயக்குனர் அஸ்வினி ஐயர் திவாரியுடன் மும்பையில் உள்ள பிரபலமான மகாலட்சுமி கோவிலுக்கு சென்று வழிபட்டு தனது நன்றியை தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து அவர் குறிப்பிடுகையில், இதையெல்லாம் அவள் (தேவி) தான் நடத்துகிறாள் என்று எனக்குத் தெரியும். சிஸ்டம் படத்திற்கு தகுதியான வெற்றியை தந்ததற்காக மகாலட்சுமி தாய்க்கு நன்றி கூறி இந்த பயணத்தை நிறைவு செய்கிறோம். தேவி மகா சக்தி எப்போதும் நமக்கு ஆற்றலை வழங்கட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேடத்துக்கு தமிழ்நாட்டுக்கு கோவில்கள் என்றால்தான் பிடிக்காது. மற்ற மாநிலக் கோவில்கள் என்றால் எந்தப் பிரச்சினையும் இல்லை. தமிழகக் கோவில்களை மட்டுமே கேவலமாக பேசும் இந்த ஒட்டு மொத்தக் குடும்பம்