‛வேட்டுவம்' படம் குறித்து சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்த சோபிதா துலிபாலா
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடம் அறிமுகமானவர் சோபிதா துலிபாலா. அதன் பிறகு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். ஆனாலும் தற்போது செலக்ட்டிவான படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் வேட்டுவம் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் சோபிதா துலிபாலா.
சமீபத்தில் இந்த படம் குறித்த சில தகவல்களை அவர் பகிர்ந்து கொண்ட போது, வேட்டுவம் ஒரு வழக்கமான கேங்ஸ்டர் படம் மட்டும் அல்ல. அதேபோல இது என்னுடைய சினிமா பயணத்திலேயே நான் கொடுத்திருக்கும் மிகச்சிறந்த நடிப்பு இந்தப்படத்திற்காக தான் இருக்கும். இது ஒரு அபோகலிப்டிக் படமாக, ஒரு மாறுபட்ட பின்னணியில் சயின்ஸ் பிக் ஷன் கலந்து உருவாகிறது. கதை ஒரே நேர்கோட்டில் பயணிக்காமல் வெவ்வேறு காலகட்டங்களைக் கடந்து செல்லும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது'' என்று கூறியுள்ளார்.