ஜூன் 25ல் திரைக்கு வரும் ஆர்யாவின் ‛அனந்தன் காடு'
ADDED : 8 hours ago
ஜியென் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் லூசிபர் பட கதையாசிரியர் எழுதியுள்ள கதையில் ஆர்யா கதாநாயகனாக நடித்துள்ள படம் 'அனந்தன் காடு'. இதில் ரெஜினா, நிகிலா விமல், இந்திரன்ஸ், சுனில் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை மினி ஸ்டுடியோஸ் மற்றும் ஆர்யாவின் தி ஷோ பீப்பிள் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். மலையாளம், தமிழ் ஆகிய இரு மொழிகளில் இப்படம் தயாராகி உள்ளது. காடு தொடர்பான வித்தியாசமான கதைக்களத்தில் இப்படம் உருவாகி உள்ளது. இந்த படம் ரெடியாகி சில மாதங்கள் ஆனபோதும் ரிலீஸில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் வருகிற ஜூன் 25ம் தேதியன்று இந்த படம் ரிலீஸாவதாக அறிவித்துள்ளனர்.