உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'மட்பிஷ்' படத்தின் மூலம் மலையாள படத்தில் அறிமுகமாகிறார் கெனிஷா

'மட்பிஷ்' படத்தின் மூலம் மலையாள படத்தில் அறிமுகமாகிறார் கெனிஷா


பாடகி கெனிஷாவுக்கு அறிமுகம் தேவையில்லை. நடிகர் ரவிமோகன் தோழியாக இருந்தார். அவரின் பட நிறுவனத்தை கவனித்து வந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு அந்த உறவின் விரிசல் ஏற்பட சென்னையை விட்டு வெளியேறிவிட்டார் என்று கூறப்பட்டது. ரவிமோகனும் தனது பேட்டியில் அவர் பிரிந்ததை உறுதிப்படுத்தினார். இந்நிலையில் அவர் மலையாளத்தில் உருவாகும் 'மட்பிஷ்' என்ற படத்தில் பாடகியாக அறிமுகம் ஆகிறார் என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. ஜிதின் ஐசக் தாமஸ் இயக்கியுள்ள இந்த படத்தில் சன்னி வேய்ன் கதாநாயகனாக நடித்துள்ளார். இதில் கெனிஷா பாடியுள்ளார்.

இந்த தகவலை ரவிமோகன் சம்பந்தப்பட்டவர்களே மீடியாவுக்கு அனுப்பி உள்ளனர். இதனால், அவர்கள் பிரியவில்லை. சட்டச் சிக்கல், ஆர்த்தி ரவி குடும்ப பிரஷர், சோஷியல் மீடியா தாக்குதல்களுக்கு பயந்து பிரிந்தது போல இருக்கிறார்கள். அவர் இப்போதும் ரவிமோகனுடன் நட்பாக இருக்கிறார். அவர் சென்னையில் இருக்கிறாரா என தெரியவில்லை. ரவிமோகன் சிக்கல்கள், சட்டப் பிரச்னைகள் தீர்ந்தவுடன் விரைவில் சென்னைக்கு வருவார் என்று கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !