ஜனநாயகன் : வினியோகஸ்தர்களுக்கு பணம் திருப்பித் தரப்படுகிறதா?
தமிழக முதல்வராகப் பதவியேற்றுள்ள நடிகர் விஜய் கடைசியாக நடித்த படம் 'ஜனநாயகன்'. தணிக்கை சான்றிதழ் காரணமாக இப்படம் ஜனவரி 9ம் தேதி வெளியாகவில்லை. அதன்பின்பு ரிவைசிங் கமிட்டியும் படத்தைப் பார்த்து முடித்துவிட்டார்கள். ஆனால், இன்னமும் படத்திற்கான தணிக்கை சான்றிதழ் திருப்பி வழங்கப்படவில்லை என்று தெரிகிறது.
இதற்கான முயற்சியில் படத் தயாரிப்பு நிறுவனம் இறங்கியும் அவர்களுக்கு சரியான தகவல் அளிக்கப்படவில்லை என்று சொல்கிறார்கள். இப்படத்திற்கான ஓடிடி உரிமையையும் வாங்கிய நிறுவனம் ரத்து செய்துவிட்டது. அதன்பின் படமும் இணையதளங்களில் திருட்டுத் தனமாக லீக் ஆனது.
இதனிடையே, இப்படத்திற்காக வாங்கிய பணத்தை வினியோகஸ்தர்களுக்கத் திருப்பித் தந்துவிடுங்கள் என தயாரிப்பாளர்களிடம் விஜய் சொன்னதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
தணிக்கை சான்றிதழ் விவகாரத்தில் மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடிக்க விஜய் விரும்பவில்லை என்கிறார்கள். தியேட்டர் வெளியீடு இல்லை என்றால் படம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகுமா என்ற சந்தேகம் அடுத்து எழுகிறது.
இந்தப் படத்திற்கான வெளியீடு கடந்த ஐந்து மாதங்களாக சஸ்பென்ஸாகவே இருந்து வருகிறது.