மீண்டும் வெப் சீரிஸில் நடிக்கும் நாகசைதன்யா
தெலுங்குத் திரையுலகின் நடிகரான நாக சைதன்யா, மீண்டும் வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்கிறார். தமிழில் சூர்யா நடித்த '24' படத்தை தெலுங்கு இயக்குனரான விக்ரம் குமார் இயக்கத்தில் நாக சைதன்யா, ஸ்ரீகாந்த் முரளி, பார்வதி திருவோத்து, பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடிப்பில் 2023ல் வெளிவந்த வெப் சீரிஸ் 'தூத்தா'. திரில்லர் வெப் சீரிஸ் ஆக நல்ல வரவேற்பைப் பெற்ற ஒரு தொடர்.
அதன் சீசன் 2வில்தான் நாக சைதன்யா மீண்டும் நடிக்கிறார். விக்ரம் குமார் இயக்க பார்வதி, பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் இந்த சீசனிலும் நடிக்கிறார்கள்.
இத்தொடரைத் தயாரிப்பதன் மூலம் தயாரிப்பாளராக எனது முதல் அடி என நாக சைதன்யா தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற பூஜையில் இயக்குனர் விக்ரம் குமார், பார்வதி, பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நாக சைதன்யா தற்போது 'விருஷகர்மா' என்ற படத்தில் நடித்து வருகிறார். பான் இந்தியா படமாக இப்படம் உருவாகி வருகிறது.