காஜல் அகர்வால் நடிக்கும் 'தி இந்தியா ஸ்டோரி' ஜூலை 24ம் தேதி வெளியாகிறது!
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட படம்'தி இந்தியா ஸ்டோரி'. இதில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர். சேட்டன் டிகே இயக்க, சாகர் பி ஷிண்டே எழுதி தயாரித்துள்ளார். படம் குறித்து இயக்குனர் கூறுகையில், ''தேசிய அளவில் தாக்கம் ஏற்படுத்தும் முக்கியமான பிரச்னையை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாகி உள்ளது.
குறிப்பாக பூச்சிக்கொல்லி விவசாயத்தில் இரசாயனங்களின் தவறான பயன்பாடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள சர்ச்சைகளை வெளிச்சமிட்டு காட்டுகிறது. ஒரு குடும்பத்தின் கதையை மட்டுமே கூறாமல், பொதுமக்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை பாதிக்கும் மிகப் பெரிய பிரச்னையாக இந்த விவகாரத்தை கதை விரிவாக எடுத்துரைக்கிறது. இந்த நிலைமையைத் தடுப்பதற்கான கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் சட்டங்கள் தேவையென்பதையும் படம் சுட்டிக்காட்டுகிறது. இந்த படத்தின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பொறுப்புணர்வை உருவாக்கவும் விரும்புகிறோம்.” என்றார்.