வாசகர்கள் கருத்துகள் (1)
Does he not marry Islamic girls?
பாலிவுட் நடிகர் அமீர்கான், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து திரைக்கு வந்த கூலி படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். அதையடுத்து ஹிந்தியில் தனது மகனான ஜூனைத்கான் மற்றும் சாய் பல்லவி இணைந்து நடித்த ஏக் தின் என்ற படத்தை தயாரித்திருந்தார். இந்நிலையில் தற்போது அமீர்கான் மூன்றாவது திருமணம் செய்து கொள்ள இருக்கும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ரீனா தத்தா என்பவரை 1986ல் திருமணம் செய்து கொண்ட அமீர்கான் 2002ல் அவரை பிரிந்தார். அதன்பிறகு, 2005ல் கிரண் ராவ் என்பவரை திருமணம் செய்து கொண்டவர் 2021ல் அவரையும் பிரிந்தார்.
இந்நிலையில் தற்போது பெங்களூரைச் சேர்ந்த 41 வயதாகும் கவுரி ஸ்ப்ராட் என்பவரை ஜூலை 5ம் தேதி மூன்றாவதாக திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளார். எளிமையான முறையில் இந்த திருமணம் நடைபெற உள்ளது. 60 வயதில் அமீர்கான் செய்யும் இந்த மூன்றாவது திருமணத்திற்கு அவரது ரசிகர்கள் ஒரு சாரர் ஆதரவு தெரிவித்தபோதும், அவரது நீண்ட கால ரசிகர்கள் இதை விமர்சிக்கின்றனர்.
இரண்டு திருமணங்கள் பிரிவில் முடிந்த பிறகு மூன்றாவதாக இன்னொரு திருமண பந்தத்தில் இவர் ஏன் நுழைய வேண்டும். அது அவரது சொந்த வாழ்க்கையில் அமைதியை கெடுத்து விடும். அதோடு வாழ்க்கையில் 61 வயதுக்கு பிறகு திருமணம் செய்து கொள்வது புதிய பொறுப்புகளையும் சிக்கல்களையும் உருவாக்கும். அதனால் இந்த திருமணம் தேவையற்றது என்று தெரிவித்து வருகிறார்கள்.
Does he not marry Islamic girls?