உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜான்வி கபூர் : கிளாமர் வாய்ப்புகளை மட்டுமே தரும் தெலுங்கு சினிமா

ஜான்வி கபூர் : கிளாமர் வாய்ப்புகளை மட்டுமே தரும் தெலுங்கு சினிமா

தமிழ் சினிமா, தெலுங்கு சினிமா, ஹிந்தி சினிமா என இந்தியத் திரையுலகத்தை ஒரு கலக்கு கலக்கியவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. அழகு, நடிப்பு என இரண்டும் கலந்த நடிகையாக ஒவ்வொரு மொழியிலும் நம்பர் 1 நடிகையாகவே இருந்தார்.

அவரது மூத்த மகள் ஜான்வி கபூர் 2018ல் வெளிவந்த 'தடக்' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து ஹிந்தியில் சில படங்களில் நடித்தாலும் இன்னமும் முன்னணி கதாநாயகியாக உயராமல் இருக்கிறார்.

தெலுங்கில் நடிக்க வாய்ப்பு வந்ததும் அங்கும் சென்றார். 2024ல் வெளிவந்த பான் இந்தியா படமான 'தேவரா' படத்தில் ஜுனியர் என்டிஆர் ஜோடியாக நடித்தார். அந்தப் படத்தில் ஜான்விக்கு பெரிய முக்கியத்துவம் தரப்படவில்லை. கிளாமர் கதாநாயகி என்ற அளவில் மட்டுமே வந்து போனார்.

அதே போலவே அவரது அடுத்த தெலுங்குப் படமாக நேற்று வெளிவந்த 'பெத்தி' படத்திலும் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் மொத்தமாக நான்கைந்து காட்சிகளில்தான் வந்து போகிறார். இப்படத்திலும் கிளாமர் காட்டி நடித்துள்ளார்.

'தேவரா, பெத்தி' இரண்டு படங்களின் புகைப்படங்களையும் பகிர்ந்து கிளாமருக்காக மட்டுமே ஜான்வியை நடிக்க வைக்கிறார்கள் என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !