உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜான்வி கபூர் பற்றிய கிளாமர் விமர்சனம் : மன்னிப்பு கேட்ட 'பெத்தி' இயக்குனர்

ஜான்வி கபூர் பற்றிய கிளாமர் விமர்சனம் : மன்னிப்பு கேட்ட 'பெத்தி' இயக்குனர்

புச்சிபாபு சனா இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையில், ராம் சரண், ஜான்வி கபூர் மற்றும் பலர் நடிப்பில் இரண்டு தினங்களுக்கு முன்பு வெளியான தெலுங்குப் படம் 'பெத்தி'. பான் இந்தியா படமாக வெளியான இப்படத்தில் கதாநாயகி ஜான்வி கபூரை, கிளாமருக்கு மட்டுமே பயன்படுத்தியுள்ளார்கள் என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனம் செய்தனர்.

அதற்கு விளக்கம் கொடுக்கும் விதமாக படத்தின் இயக்குனர் புச்சிபாபு சனா எக்ஸ் தளத்தில்,

“ஒரு திரைப்பட இயக்குநராக, சினிமா என்பது பார்வையாளர்களை மகிழ்விக்கவும், உத்வேகமூட்டவும், அவர்களுடன் இணைக்கவும் வேண்டும் என்பதில் நான் உறுதியாக நம்புகிறேன். அது யாரையும் அசவுகரியமாகவோ அல்லது அவமதிக்கப்பட்டதாகவோ உணர வைக்கக் கூடாது. 'பெத்தி' படத்தின் சில காட்சிகள் குறித்து வந்த விமர்சனங்களை நாங்கள் கேட்டுள்ளோம் மற்றும் அதை தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளோம்.

பெண்களுக்கு திரையில் மற்றும் திரைக்கு வெளியே எப்போதும் பெரும் மரியாதை வைத்துள்ளேன், மேலும் எந்த பெண் கதாபாத்திரத்தையும் போகப் பொருளாகவோ அல்லது அவமதிக்கவோ எங்கள் நோக்கம் ஒருபோதும் இல்லை. படத்தின் எந்தப் பகுதியும் அவ்வாறு உணரப்பட்டிருந்தால், அந்த உணர்வுகளை நாங்கள் மதிக்கிறோம், எழுப்பப்படும் கவலைகளைப் புரிந்துகொள்கிறோம், மற்றும் மனதார மன்னிப்பு கேட்கிறோம்.

விமர்சனங்களை மறுபரிசீலனை செய்த பிறகு, தொடர்புடைய பகுதிகளில் மாற்றங்கள் செய்ய முடிவு செய்துள்ளோம். சினிமா பார்வையாளர்களுடன் உருவாகும் இணைப்பின் மூலமே வளர்கிறது, மேலும் கதை சொல்லிகளாக, மாறும் பார்வைகள் மற்றும் உணர்திறன்களை கவனத்தில் கொள்ளும் பொறுப்பு நமக்கு உள்ளது.

ஒவ்வொரு பெண்ணும் மரியாதைக்குரியவராகவும், மதிப்புக்குரியவராகவும், கண்ணியத்துடன் பிரதிநிதித்துவப்படுத்தப்படவும் தகுதியானவர். வலிமையான கதாபாத்திரங்களைக் கொண்டாடும் கதைகளைச் சொல்லவும், அந்த மதிப்புகளை உயர்த்தவும் நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம்.

எங்களுடன் நேர்மையாகவும் உண்மையாகவும் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்த அனைவருக்கும் நன்றி,” என விளக்கம் அளித்துள்ளார்.

அவர் சொன்னபடி படத்தில் உள்ள ஜான்வி கபூர் சம்பந்தப்பட்ட கிளாமர் காட்சிகள் நீக்கப்படலாம் எனத் தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

Barakat Ali, Medan
2026-06-06 21:53:34

வயவதாவதற்குள் கவர்ச்சியாக நடித்து பணம் சம்பாதித்துவிட வேண்டும் என்பது நடிகைகளின் கொள்கை ....