உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மோகன்லால் படம் நிறுத்தப்பட்டதாக வெளியானது தவறான தகவல் ; இயக்குனர் விளக்கம்

மோகன்லால் படம் நிறுத்தப்பட்டதாக வெளியானது தவறான தகவல் ; இயக்குனர் விளக்கம்


மோகன்லால் நடிப்பில் கடந்த வருடம் மலையாளத்தில் 'தொடரும்' என்கிற படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தை இயக்குநர் தருண் மூர்த்தி இயக்கியிருந்தார். இந்த நிலையில் தற்போது மீண்டும் மோகன்லாலை வைத்து 'அதிமனோஹரம்' என்கிற படத்தை இயக்கி வருகிறார் தருண் மூர்த்தி.. இந்த நிலையில் இந்த படம் கைவிடப்பட்டதாக சமீபத்தில் சமூக வலைதளங்களில் சில செய்திகள் வெளியாகின. இதனால் அதிர்ச்சியான இயக்குநர் தருண் மூர்த்தி இது குறித்து விளக்கம் அளிக்கும் விதமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “அன்பான நண்பர்களே, திரைக்கதையில் ஏற்பட்ட குழப்பத்தால் எங்களது படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக சோஷியல் மீடியாவில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் பொய்யானது. இது குறித்து எனக்கு பலரும் மெசேஜ் அனுப்பியும், போனில் அழைத்தும் விசாரித்து வருகின்றனர். நாங்கள் கடந்த 78 நாட்களாக தொடுபுழா பகுதியில் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தி வருகிறோம்.

சில நேரங்களில் மழையும் மோசமான வானிலையும் காரணமாக எங்கள் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டாலும் சவால்களை எதிர்கொண்டு தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தி வருகிறோம்.. லைக் மற்றும் வியூஸ் பெறுவதற்காக வேண்டுமென்றே இதுபோன்று தவறான தகவல்களை பரப்புபவர்கள் தயவு செய்து இதை நிறுத்திக் கொள்ளுங்கள்.. இது தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துவதுடன் ஒட்டுமொத்த குழுவின் உழைப்பையும் பாதிக்கும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !