உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நடிகர் உன்னி முகுந்தன் புகாரின் பேரில் போதைப்பொருள் பயன்படுத்தியவர்கள் அதிரடி கைது

நடிகர் உன்னி முகுந்தன் புகாரின் பேரில் போதைப்பொருள் பயன்படுத்தியவர்கள் அதிரடி கைது


தமிழகத்தில் மட்டுமல்லாமல் கேரளாவிலும் போதைப்பொருள் பயன்பாடு அதிக அளவில் புழக்கத்தில் இருந்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் பெரும்பாவூர் மாவட்டத்தில் இளைஞர்கள் சிலர் சிரின்ஜுகள் மூலம் போதைப்பொருட்களை தங்களது உடலில் செலுத்திக் கொள்வது போன்ற ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ பெரும்பாவூர் டைரிஸ் என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியானது.

இந்த வீடியோ பிரபல நடிகர் உன்னி முகுந்தனின் பார்வையில் பட்டதும் அவர் உடனடியாக இதை கேரள காவல்துறைக்கு அனுப்பி சம்பந்தப்பட்டவர்களின் மீது நடவடிக்கை எடுக்குமாறு நேரடியாக புகார் அளித்தார். அவரது புகாரைப் பெற்றுக்கொண்ட கேரள போலீஸ் உடனடியாக செயல்பட்டு அன்று மாலைக்குள்ளேயே போதைப்பொருள் பயன்படுத்திய நபர்களை அடையாளம் கண்டு அதிரடியாக கைது செய்தது போலீசாரின் இந்த துரித நடவடிக்கைக்கு நடிகர் உன்னி முகுந்தன் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !