சிரஞ்சீவி படத்தில் இணைந்த ரக்ஷிதா ராம்
2023ல் தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் 'வால்டேர் வீரய்யா' திரைப்படம் வெளியானது இந்த படத்தை இயக்குனர் பாபி கொல்லி இயக்கியிருந்தார். இதனை அடுத்து இவர்கள் இருவரும் தற்போது உருவாகும் சிரஞ்சீவி 158வது படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளனர். அதிரடி கேங்ஸ்டர் திரைப்படமாக இது உருவானாலும் தந்தை மகள் பாசத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தும் உருவாகி வருகிறது. இதில் சிரஞ்சீவியின் மகளாக மலையாள இளம் நடிகை அனஸ்வரா ராஜன் நடிக்கிறார். சிரஞ்சீவிக்கு ஜோடியாக பிரியாமணி நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. தற்போது பொள்ளாச்சி பகுதியில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் கன்னட நடிகையும் கடந்த வருடம் வெளியான 'கூலி' படத்தில் வில்லியாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவருமான நடிகை ரக்ஷிதா ராம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக இணைந்துள்ளார். இதற்கு முன்னதாக நடிகை ஹனிரோஸ் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் அவருக்கு பதிலாக ரக்ஷிதா ராம் இதில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.