ஓணம் பண்டிகைக்கு வெளியாகும் பெத்லகேம் குடும்ப யூனிட்
கடந்த 2024ல் மலையாளத்தில் வெளியான 'பிரேமலு' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கிரிஷ் ஏடி என்பவர் இயக்கிய இந்த படம் 100 கோடி வசூல் சாதனை செய்தது. அதுமட்டுமல்ல இந்த படத்தில் கதாநாயகியாக நடித்த மமிதா பைஜு இந்த படத்தின் மூலம் முன்னணி நடிகை வரிசைக்கு உயர்ந்துள்ளார். இதனை தொடர்ந்து இயக்குனர் கிரிஷ் ஏடி தற்போது 'பெத்லகேம் குடும்ப யூனிட்' என்கிற படத்தை இயக்கி வருகிறார். இதில் நிவின்பாலி கதாநாயகனாக நடிக்க மமிதா பைஜு கதாநாயகியாக நடிக்கிறார்.
பிரேமலு படத்தை தயாரித்த இயக்குனர் திலீஷ் போத்தன், கதாசிரியர் ஷியாம் புஷ்கரன் ஆகியோருடன் நிவின்பாலியும் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 100 நாட்களுக்கு மேலாக நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில் இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் பஹத் பாசில் வெளியிட்டுள்ளார். இந்த படம் ஓணம் பண்டிகை கொண்டாட்டமாக வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.