உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நோவா படத்தில் ஆக் ஷனில் ரைசா வில்சன்

நோவா படத்தில் ஆக் ஷனில் ரைசா வில்சன்

கவர்ச்சி நடிகையாக இருந்து வந்த ரைசா வில்சன், சமீபத்தில் வந்த மிஸ்டர் எக்ஸ் படத்தில் மாறுபட்ட வேடத்தில் வந்தார். இப்போது நோவா படத்தில் அக் ஷனுக்கு மாறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் , “ஒரு கதைக்குள் இன்னொரு கதை என்கிற விதமாக இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் நான் ப்ளாஷ்பேக் காட்சிகளில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் வருகிறேன். ஆக் ஷன், த்ரில்லர், சயின்ஸ் பிக் ஷன் கலந்து இந்த படம் உருவாகி இருக்கிறது.

கேரளாவில் உள்ள மறையூர் காடுகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது. அனுமதி கிடைப்பதற்கே சிரமமான சந்தன மரக் காடுகளுக்குள் சென்று படப்பிடிப்பு நடத்தினார்கள். ரத்தம் உறிஞ்சும் அட்டைகள், பெரும்பாலான நேரம் பனி மற்றும் மழை, வன விலங்குகளின் அச்சுறுத்தும் சத்தம், சேறும் சகதியுமான பாதைகள் என அந்த பகுதியில் பல சவால்களை எதிர்கொண்டு படப்பிடிப்பை நடத்தினோம். பெரும்பாலான நேரம் மழை பெய்ததால் ஈரமான உடையுடனே படப்பிடிப்புத் தளத்தில் அமர்ந்திருப்பேன். குறிப்பாக நான் நடித்த ஆக் ஷன் காட்சிகள் அங்கே படமாக்கப்பட்டன. விமல் ராம்போ மாஸ்டர் இதற்கான பிரத்தியேகமான பயிற்சி அளித்தார். நான் ஏற்கனவே மிஸ்டர் எக்ஸ் படத்திற்காக சண்டைக் காட்சிகளில் பயிற்சியெடுத்து கொஞ்சம் பழகி இருந்தேன். அதனால் நோவா படத்தில் நடிக்கும்போது அது எளிதாக இருந்தது.

எப்ஐஆர், மிஸ்டர் எக்ஸ், பியார் பிரேமா காதல் படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து நிறைய படங்கள் ஒப்பந்தமானேன். அதில் சில படங்கள் படப்பிடிப்பு முடிந்தும்விட்டன ஜி.வி பிரகாஷ் உடன் காதலிக்க யாருமில்லை என்கிற படத்தில் நடித்தேன். 95 சதவீதம் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. 2019-ல் ஆரம்பித்த அந்த படம் இன்னும் ஏன் ரிலீஸ் ஆகவில்லை எனத் தெரியவில்லை. எதனால் இப்படி நடக்கின்றது என்றும் எனக்கு புரியவில்லை. அதனாலேயே ஒரு இடைவெளி விழுந்தது போன்ற தோற்றம் ஏற்பட்டுவிட்டது. இதே போலத்தான் சேஸ் என்கிற படமும் ரிலீஸ் ஆகாமல் நிற்கிறது'' என்கிறார்.

ஹாரர், சயின்ஸ் பிக் ஷன், சூப்பர் நேச்சுரல், பேண்டஸி திரில்லர் படமாக ‛நோவா' உருவாகி உள்ளது. 'ஆண்மை தவறேல்' துருவா, கர்நாடகாவைச் சேர்ந்த அத்விதி ஷெட்டி, வங்காள நடிகையான கிருத்திகா பிஸ்வாஸ், மலையாள நடிகர் ஜோ ஜான் சாக்கோ, சென்ராயன் உட்பட பலர் நடிக்க, மிலோ இயக்குகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !