ஜூன் 10ல் வெளியாகும் ‛மகுடம்' பட டீசர்
ADDED : 13 hours ago
விஷால் நடிப்பில் உருவாகி வரும் படம் ‛மகுடம்'. சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 99வது படமாக உருவாகிறது. துஷாரா விஜயன், அஞ்சலி, யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். முதலில் இந்த படத்தை ‛ஈட்டி, ஐங்கரன்' படங்களை இயக்கிய ரவி அரசு தான் இயக்கி வந்தார். இடையில் விஷால், ரவி இடையே மன கசப்பு ஏற்பட பின்னர் இயக்கத்தையும் விஷாலே ஏற்று படத்தை இயக்கி வருகிறார். விஷால் இதில் மூன்று விதமான கெட்டப்புகளில் நடிக்கிறார். அதிரடி ஆக் ஷன் படமாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்நிலையில் படத்தின் டீசர் நாளை ஜூன் 10ல் வெளியாகும் என அறிவித்துள்ளனர். இதனுடன் படத்தின் ரிலீஸ் தேதியும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.