உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இந்த மாதம் வெளியாகும் தனுஷ் 55 பட தலைப்பு, முதல் பார்வை

இந்த மாதம் வெளியாகும் தனுஷ் 55 பட தலைப்பு, முதல் பார்வை

நடிகர் தனுஷ், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியில் தனுஷின் 55வது படம் உருவாகி வருகிறது. மலையாள நடிகர் மம்முட்டி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். கதாநாயகிகளாக ஸ்ரீலீலா, சாய் பல்லவி ஆகியோர் நடிக்கின்றனர். தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனமும், ஆர்டேக் ஸ்டுடியோஸ் ஆகிய இரு தயாரிப்பு நிறுவனங்களும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பை இம்மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளனர். அதேபோல் இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. அதனால் இம்மாதத்திற்குள் இந்த படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வை போஸ்டரை வெளியிட திட்டமிட்டுள்ளனர் என தகவல் கிடைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !