உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அனைவரும் மறந்து போன 'இந்தியன் 3'

அனைவரும் மறந்து போன 'இந்தியன் 3'


ஷங்கர் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையில், கமல்ஹாசன், ஊர்மிளா மடோன்த்கர், மனிஷா கொய்ராலா மற்றும் பலர் நடிப்பில் 1996ல் வெளிவந்த படம் 'இந்தியன்'. கமல்ஹாசனின் திரையுலகப் பயணத்தில் முக்கியமான படங்களில் ஒன்றாக இந்தப் படம் பேசப்படுகிறது.

சுமார் 28 ஆண்டுகளுக்குப் பிறகு 2024ம் ஆண்டில் அதன் இரண்டாம் பாகமாக 'இந்தியன் 2' படம் வெளிவந்தது. இரண்டாம் பாகத்தில் கமல்ஹாசன் தவிர முதல் பாகத்தின் முக்கிய நடிகர்கள், நடிகைகள் இரண்டாம் பாகத்தில் நடிக்கவில்லை. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். யாரும் எதிர்பார்க்காத விதத்தில் இந்தப் படம் படுதோல்வி அடைந்தது.

இரண்டாம் பாகத்தின் முடிவில் மூன்றாம் பாகத்தின் டிரைலராக சில காட்சிகள் இடம் பெற்றன. அடுத்த சில மாதங்களில் அல்லது அடுத்த வருடத்தில் மூன்றாம் பாகம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இரண்டாம் பாகம் வெளியாக சுமார் இரண்டு வருடங்கள் ஆகப் போகிறது. படம் பற்றிய எந்த ஒரு தகவலும் வெளிவராமல் உள்ளது. ரசிகர்களும், படக்குழுவினரும் கூட 'இந்தியன் 3' என்பதை மறந்தே போய்விட்டார்கள்.

படத் தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் கடந்த வாரம் 'பரிமளா அண்ட் கோ' படத்தை வெளியிட்டது. அடுத்து 'சிக்மா' படத்தை அடுத்த மாதம் வெளியிட உள்ளது. 'இந்தியன் 3' பற்றி எந்த ஒரு அப்டேட்டையும் அந்த நிறுவனமும் வெளியிடவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

ckp
2026-06-09 19:35:11

அது ஒன்னும் அவ்வளவு பெரிய காவியம் இல்லைங்க....