உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 2026 - தென்னிந்திய வசூலில் முதலிடத்தில் 'பெத்தி'

2026 - தென்னிந்திய வசூலில் முதலிடத்தில் 'பெத்தி'


2026ம் ஆண்டில் இந்திய அளவில் சுமார் 1800 கோடிக்கும் அதிகமாக வசூலித்து 'துரந்தர் 2' ஹிந்திப் படம் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் மற்றொரு ஹிந்திப் படமான 'பார்டர் 2' படம் 450 கோடி வசூலுடன் இருக்கிறது.

தற்போது 3வது இடத்தை 345 கோடி வசூலுடன் தெலுங்குப் படமான 'பெத்தி' படம் பிடித்துள்ளது. இதுவரையில் 320 கோடிக்கும் அதிகமான வசூலுடன் இருந்த தமிழ்ப் படம் 'கருப்பு' படம் 4வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

சிரஞ்சீவி நடித்து சங்கராந்திக்கு வெளியான 'மன ஷங்கர் வர பிரசாத்காரு' சுமார் 300 கோடியுடன் 5வது இடத்தில் உள்ளது.

தென்னிந்திய திரையுலகத்தைப் பொறுத்தவரை 'பெத்தி' படம் தற்போது முதலிடத்தைப் பிடித்துள்ளது. தெலுங்கு திரையுலகத்தைப் பொறுத்தவரை மகன் ராம் சரண் நடித்த படம் முதலிடத்திலும், அப்பா சிரஞ்சீவி நடித்த படம் இரண்டாவது இடத்திலும் உள்ளது.

ஹிந்திப் படமான 'பூத் பங்களா' 245 கோடி வசூலுடன் 6வது இடத்தில் உள்ளது. மலையாளப் படங்களான 'த்ரிஷ்யம் 3' 237 கோடி வசூலைக் கடந்து இந்திய அளவில் 7வது இடத்திலும், 'வாழ 2' படம் 235 கோடி வசூலுடன் 8வது இடத்திலும் உள்ளன. மராத்திப் படமான 'ராஜா சிவாஜி' படம் 130 கோடி வசூலுடன் 10வது இடத்தைப் பிடித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (2)

Tetra, New jersy
2026-06-12 14:09:28

ஏன் இருக்காது. இரு பெண்கள் உடலை வருத்தி நடனமாடுகிறார்களே. கூட்டம் குவியாதா


சசிக்குமார் திருப்பூர்
2026-06-12 11:12:21

செலவு வரவு கணக்கெடுப்பின்படி ராஜா சிவாஜி 10 கோடி செலவில் 100 கோடிக்கு மேல் லாபம். கருப்பு 130 கோடி செலவில் 100 கோடி லாபம். பெத்தி 200 கோடி செலவில் 100 கோடி லாபம். இதில் அதிகபட்ச லாபம் ராஜா சிவாஜி