உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஸ்ட் படத்தை மிஸ் செய்த சுவாசிகா

பிளாஸ்ட் படத்தை மிஸ் செய்த சுவாசிகா

மலையாள நடிகை சுவாசிகா தமிழில் கோரிப்பாளையம், அப்புச்சி கிராமம் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு அடையாளம் தந்தது லப்பர் பந்து படம் தான். இந்த படத்தின் மூலம் ரீ என்ட்ரியாக தொடர்ந்து அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வருகிறது. மாமன், ரெட்ரோ, கருப்பு ஆகிய படங்களை தொடர்ந்து தற்போது விஜய் ஆண்டனி உடன் நூறு சாமி படத்தில் நடித்துள்ளார்.

இவர் அளித்த பேட்டி ஒன்றில் பேசியது வைரலாகி வருகிறது. அதில், சமீபத்தில் தமிழில் வெளியாகி வெற்றி படமாக அமைந்துள்ள பிளாஸ்ட் படத்தில் அபிராமி நடித்திருந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க எனக்கு தான் வாய்ப்பு வந்தது. அந்த நேரத்தில் கருப்பு, நூறு சாமி படங்களில் நடித்து வந்ததால் பிளாஸ்ட் படத்திற்கு கால்ஷீட் தர முடியவில்லை. பிளாஸ்ட் மிஸ் ஆனது கொஞ்சம் வருத்தமே என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !