366 கோடி வசூலைப் பெற்ற 'பெத்தி'
ராம் சரண், ஜான்வி கபூர் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த தெலுங்குத் திரைப்படம் 'பெத்தி'. இப்படம் தற்போது 366 கோடி வசூலைப் பெற்றுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 9 நாட்களில் இந்த வசூல் கிடைத்துள்ளது.
தென்னிந்திய அளவில் தற்போதைக்கு இந்தப் படம்தான் வசூலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதற்குப் போட்டியாக இருந்த தமிழ்ப் படமான 'கருப்பு' படம் 340 கோடி வசூலைக் கடந்துள்ளதாக நேற்று அறிவித்திருந்தார்கள்.
'கருப்பு' படம் நேற்று ஓடிடி தளத்திலும் வெளியாகிவிட்டது. அதனால், தியேட்டர் வசூல் இன்னும் சில நாட்கள் மட்டுமே நீடிக்கும். இதனால், தற்போதைக்கு 'பெத்தி' படம்தான் தென்னிந்திய வசூலில் முதலிடத்திலேயே இருக்கும்.
அதே சமயம் 'பெத்தி' படம் லாபத்தைத் தர இன்னும் 40 கோடி வசூலைப் பெற வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால், 'கருப்பு' படம் 100 கோடிக்கும் அதிகமான லாபத்தைக் கொடுத்துவிட்டது.