உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அமீர்கான் மகனை தடுத்து நிறுத்திய சல்மான்கானின் பாதுகாவலர்

அமீர்கான் மகனை தடுத்து நிறுத்திய சல்மான்கானின் பாதுகாவலர்


கடந்த 2021ல் அமீர்கான் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற 'லகான்' திரைப்படம் வெளியாகி தற்போது 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை முன்னிட்டு, அதன் 25வது ஆண்டு விழா சமீபத்தில் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் நடிகைகள் கஜோல், ஜூஹி சாவ்லா ஆகியோருடன் நடிகர் சல்மான்கான் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். சல்மான்கான் அரங்கிற்குள் நுழைந்தபோது, அவரை வரவேற்பதற்காக அமீர்கானின் மகன் ஜுனைத் கான் வேகமாக அவரை நோக்கிச் சென்றுள்ளார்.

ஆனால், ஜுனைத் கான் யார் என்று சரியாக அடையாளம் தெரியாததால், சல்மான்கானுடன் வந்த பாதுகாவலர் அவரை ஏதோ ஒரு ரசிகர் என நினைத்து தடுத்து நிறுத்தினார். இதை உடனடியாக கவனித்த சல்மான்கான், தன் பாதுகாவலரை விலக்கிவிட்டு, ஜுனைத் கானைத் தன்னிடம் இழுத்து அன்போடு அணைத்துக் கொண்டார். ஒரு சங்கடமான சூழ்நிலை உருவாகவிருந்ததைத் தவிர்த்து, அதனை நெகிழ்ச்சியான தருணமாக மாற்றிய சல்மான்கானின் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !