உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / துபாய் காதலரை பிரிந்த நடிகை சுனைனா?

துபாய் காதலரை பிரிந்த நடிகை சுனைனா?


தமிழில் 'காதலில் விழுந்தேன்' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சுனைனா. அதன் பின் 'வம்சம், நீர்ப்பறவை, தெறி, காளி, குபேரா' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

அவருக்கும் துபாயைச் சேர்ந்த யு டியூபர் கலித் அல் அமெரி என்பவருக்கும் இடையே திருமண நிச்சயம் ஏற்கெனவே நடந்ததாக செய்திகள் வெளிவந்தன. ஆனால் இருவரும் அது பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இதனிடையே, இருவரும் தற்போது பிரிந்துவிட்டதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

அவர்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்த புகைப்படங்களையும் நீக்கிவிட்டார்களாம். தனது யு டியூப் சேனலில் 6 மில்லியனுக்கும் மேற்பட்ட பாலோயர்களை வைத்துள்ளவர் கலித் அல் அமெரி. இவர்களது திடீர் பிரிவிற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை.

சில சினிமா நடிகர்கள், நடிகையர்களின் காதல், திருமண வாழ்க்கை ஆகியவை குறுகிய காலத்திலேயே பிரிவை நோக்கிப் போய்விடுகிறது. அது போலவே சுனைனாவின் காதலும் பிரிந்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

குமார்
2026-06-16 13:49:25

பணத்தாசையால் வெளிநாடு உல்லாச வாழ்க்கை என்று போய் விழுகிறார்கள். கெட்டபின் தெரிகிறது அது நிராசை என்று. இக்கரைக்கு அக்கரை பச்சை. இது போன்ற நடிகைகள் நிஜ உலகத்தில் வாழ்வதில்லை. இனியாவது உண்மையான மனிதனை நிஜ நல்வாழ்க்கையை கண்டறிய முயற்சித்தால் நன்று.