உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 2023ல் சினிமாவை விட்டு விலக நினைத்த நிவேதா பெத்துராஜ்

2023ல் சினிமாவை விட்டு விலக நினைத்த நிவேதா பெத்துராஜ்

சமீபகாலமாக தமிழில் படங்கள் இல்லாத நிலையில் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ். மேலும், தனது காதலரை நிவேதா திருமணம் செய்து கொள்ள தயாராகி விட்டதாக கூறப்பட்ட நிலையில், நிச்சயதார்த்தத்தோடு அவர் திருமணம் தடைபட்டதாக பின்னர் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் தற்போது நிவேதா பெத்துராஜ் அளித்த பேட்டி வைரலாகி வருகிறது. அதாவது, ''94 வயதான சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கி திரைக்கு வந்துள்ள 40 ஆண்டு கால கனவு திட்டமான சிங்கீதம் என்ற படம் கடந்த 12ஆம் தேதி வெளியானது. இது ஒரு மியூசிக்கல் பேண்டஸி படம் ஆகும். இந்த படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்துள்ள நிவேதா பெத்துராஜ், நான் நடித்துள்ள சைலஜா என்ற கதாபாத்திரம் சிறியது என்றாலும், ரசிகர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2023ம் ஆண்டில் திரைப்படத்துறையை விட்டு விலகும் முடிவை நான் எடுத்திருந்தேன். அப்படி எடுத்திருந்தால் என்னுடைய வாழ்க்கை எதிர்பாராத பாதையில் சென்றிருக்கும். சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கி உள்ள பிரம்மாண்ட படமான சிங்கீதத்தில் நான் நடித்திருக்க மாட்டேன். இந்த படத்தில் ஒரு பகுதியாக என்னை மாற்றியமைப்பதற்காக தயாரிப்பாளர் நாக் அஸ்வினுக்கு நன்றி. அதோடு, இந்த வாய்ப்பு கிடைக்காமல் இருந்திருந்தால் இமயமலையில் எங்காவது நான் தியானம் செய்து கொண்டிருப்பேன்'' என தெரிவித்துள்ளார் நிவேதா பெத்துராஜ்.

அடுத்தபடியாக பாபி இயக்கத்தில் சிரஞ்சீவி நடிக்கும் புதிய படத்திலும் நிவேதா பெத்துராஜ் கமிட்டாகி இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடைபெற்ற போது அவரும் சில காட்சிகளில் நடித்திருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !