ஜெயிலர் 2 சிறப்பு பாடலில் பூர்ணா
ADDED : 4 hours ago
நெல்சன் இயக்கத்தில் 'ஜெயிலர் 2' படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, சிவராஜ் குமார், மோகன்லால், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இருப்பினும் விடுபட்ட காட்சிகளை படமாக்குகின்றனர். ஜெயிலர் 2 படத்தில் இடம் பெற்றுள்ள சிறப்பு பாடலில் நோரா பதேகி நடனமாடுகிறார் என ஏற்னவே தகவல் வெளியானது. இப்போது கூடுதலாக இந்த சிறப்பு பாடலில் நடிகை பூர்ணாவும் நடனமாடியுள்ளார் என கூறப்படுகிறது. இவர் தெலுங்கு படமான குண்டூர் காரம் படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு நடனமாடி பிரபலமானார். இவர் தமிழில் தகராறு, கந்தக்கோட்டை, முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.