உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நாளை வெளியாகும் ஜியோ படத்தின் முதல் பார்வை

நாளை வெளியாகும் ஜியோ படத்தின் முதல் பார்வை

இயக்குனர் எம்.ராஜேஷ், நடிகர் ஜீவா, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் கூட்டணியில் 2009ல் வெளியான படம் 'சிவா மனசுல சக்தி'. கிட்டத்தட்ட 16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணியில் 'ஜியோ' (ஜாலியா இருந்த ஒருத்தன்) என்கிற புதிய படம் உருவாகி வருகிறது. இதில் கதாநாயகியாக இவானா நடிக்கிறார். மலேசியாவை சேர்ந்த மாலிக் ஸ்டீரிம்ஸ் என்கிற விநியோகஸ்தர் தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முழுவதுமாக நிறைவு பெற்று போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஜியோ படத்தின் முதல் பார்வை போஸ்டரை நாளை ஜூன் 18ம் தேதியன்று மாலை 6 மணியளவில் வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளனர் .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !