வாசகர்கள் கருத்துகள் (1)
OTT கருப்பு படத்திட்கு முன்பே sold !
'கருப்பு' படத்தின் வெற்றிக்கு பிறகு சூர்யாவின் மார்க்கெட் வேல்யூ கணிசமாக உயர்ந்துள்ளது. அடுத்து அவர் நடிப்பில் வெளிவர உள்ள படமான 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படம் முன்பு நிர்ணயிக்கப்பட்ட மார்க்கெட் மதிப்பை விட அதிக விலைக்கு பேசப்பட்டு வருகிறது. தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகி இருப்பதால் ஓடிடி நிறுவனங்களும் இந்த படத்தை வாங்க ஆர்வம் காட்டுகிறது.
தந்தை மகன் உறவை மையப்படுத்தி இந்த படம் உருவாகி இருந்தாலும், சூர்யா, மமிதா பைஜுவின் காதலுக்கும் முக்கியத்தும் கொடுத்து உருவாகி உள்ளது. ராதிகா சரத்குமார் மற்றும் ரவீனா டாண்டன் ஆகியோர் முக்கிய கேக்டரில் நடித்துள்ளனர். படம் வருகிற ஆக., 14ம் தேதி வெளியாகவுள்ளது.
வெங்கி அட்லூரி இயக்கி உள்ள இந்த படத்திறகு ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார். சூர்யதேவரா நாகவம்சி மற்றும் சாய் சவுஜன்யா ஆகியோர், சித்தாரா என்டர்டெயின்மெண்ட்ஸ், ஃபார்ச்சூன் போர் சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கின்றனர். ஸ்ரீகரா ஸ்டுடியோஸ் நிறுவனம் படத்தை வழங்குகிறது. சமீபத்தில் இப்படத்தின் முதல் சிங்கிளான “பட்டாம்பூச்சி / நேனோ பட்டர்ப்ளை” பாடலை படக்குழு வெளியிட்டது. தற்போது இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
OTT கருப்பு படத்திட்கு முன்பே sold !