ஜுலை 3ல் குறைந்த படங்களே ரிலீஸ்
2026ம் ஆண்டின் ஆறு மாதங்கள் நாளையுடன் முடிவடைய உள்ளது. இந்த ஆறு மாதங்களில் தமிழில் சுமார் 120 படங்கள் வரை தியேட்டர்களில் வெளியாகி உள்ளன. கடந்த ஜுன் மாதத்தில் மட்டும் 22 படங்கள் வெளியாகி இருக்கிறது.
வரும் ஜுலை மாதத்திலும் பல புதிய படங்கள் வெளியாக உள்ளன. அவற்றிற்கான அறிவிப்புகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து கொண்டிருக்கிறது.
இந்த வாரம் ஜுலை 3ம் தேதி 'இரு முனை, கட்டா குஸ்தி 2, புத்தம் புது நேரம்,' ஆகிய மூன்று படங்களின் வெளியீடுகள் பற்றி மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் வெளியான படங்கள் இந்த வாரம் வரையில் தாக்குப் பிடிப்பதே பெரிய விஷயம்தான். ஜுலை மாதத்தில் அடுத்தடுத்து வெளியாக உள்ள படங்களும் மீடியம் பட்ஜெட் படங்களாகத்தான் உள்ளன. அடுத்த பெரிய வெளியீடு என்றால் ஆகஸ்ட் மாதத்தில் சூர்யா நடித்துள்ள 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' மட்டும்தான்.
இன்னும் ஆறு வாரங்களுக்கு தியேட்டர்கள் மீடியம் பட்ஜெட் படங்களை நம்பித்தான் இருக்கிறது.