வாசகர்கள் கருத்துகள் (1)
பொன்மனச் செம்மல்... கொடுத்து கெடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர்
1960ம் ஆண்டு வெளியான படம் ராஜா தேசிங்கு. இதில் தாவுத், தேசிங்கு என இரண்டு வேடத்தில் எம்ஜிஆர் நடித்தார். இவருடன் பானுமதி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், பத்மினி, டி.எஸ்.பாலைய்யா, தங்கவேலு, எம்ஜி.சக்கரபாணி ஓஏகே தேவர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். டி.ஆர்.ரகுநாத் இயக்கினார், கண்ணதான் திரைக்கதை, வசனம் எழுதினார். ஜி.ராமநாதன் இசை அமைத்திருந்தார்.
இந்த படத்தில் முதலில் எம்ஜிஆர் ஜோடியாக பத்மினி நடிப்பதாக இருந்தது. ஆனால் எம்ஜிஆர் பானுமதிதான் வேண்டும் என்று அடம்பிடிக்க அதிக சம்பளம் கொடுத்து அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டார், படத்தை ஷெட் போட்டு எடுக்காமல் ஒரிஜினல் கோட்டையில் எடுக்க வேண்டும் என்றார் எம்ஜிஆர், இப்படி பல விதங்களில் படத்தின் பட்ஜெட் உயர எம்ஜிஆர் காரணமாக இருந்தார். இதனால் எம்ஜிஆருக்கும் தயாரிப்பாளர் லேனா செட்டியாருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு படமும் தாமதமாக வெளிவந்தது.
வெளியான படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதை தொடர்ந்து 'எம்ஜிஆரால் என் சொத்துக்களை இழந்து விட்டேன்' என்று லேனா செட்டியார் பல இடங்களில் புலம்பி இருக்கிறார். இதை அறிந்த எம்ஜிஆர் படத்திற்கு தான் வாங்கிய சம்பளத்தை லேனா செட்டியாருக்கு திருப்பி அனுப்பினார். 'என்னால் செட்டியார் கஷ்டப்படக்கூடாது நான் அடுத்த படத்தில் சம்பாதித்துக் கொள்வேன். அவரால் அடுத்த படம் எடுக்க முடியாது' என்று கடிதம் எழுதினாராம் எம்ஜிஆர்.
பொன்மனச் செம்மல்... கொடுத்து கெடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர்