ஆயிரம் கோடி நஷ்டத்தை சந்தித்த சூப்பர் ஹீரோயின்ஸ் படம்
ADDED : 11 hours ago
ஹாலிவுட்டில் சூப்பர் ஹீரோஸ், சூப்பர் ஹீரோயின்ஸ் படங்களுக்கு என மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது. அதிலும் சமீப காலமாக ஹீரோயின்களை மையப்படுத்தி பல சூப்பர் ஹீரோயின்ஸ் படங்கள் வருகிறது.
அந்த வகையில் 'சூப்பர் கேர்ள்' படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. இந்த படம் 175 மில்லியன் டாலரில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தப் படம் மற்ற படங்களைப் போல பெரிய வரவேற்பை பெறவில்லை. கதையும் தொழில்நுட்பத் தரமும் போதுமான அளவு இல்லை என்பதே படத்தின் தோல்விக்கு காரணம் என்கிறார்கள்.
இதனால் இந்திய மதிப்பில் 1000 கோடி வரை இப்படம் நஷ்டத்தை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த 'சூப்பர் மேன்' படமே பெரியளவில் ஹிட் ஆகாத நிலையில் தற்போது சூப்பர் கேர்ள் படத்தில் வீழ்ச்சி ஹாலிவுட் வியாபார வட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.