காமெடி பட நாயகனாக பாலாஜி சக்திவேல்
ஜே.பி சினிமாஸ் நிறுவத்தின் சார்பில் ஜெயக்குமார் மற்றும் ப்ரீத்தி தயாரிக்கும் படம் 'ஜூமாக்கா'. இதில் முனீஸ்காந்த், பாலாஜி சக்திவேல், ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, கல்கி ராஜா, ஜென்சன் திவாகர், ஜெயக்குமார் மற்றும் வினோத் முன்னா போன்ற பெரிய காமெடி பட்டாளமே நடித்துள்ளனர். அசோக் ராமய்யா இயக்கி உள்ளார்.
படம் பற்றி அவர் கூறும்போது “இது காமெடி கலந்த பேண்டசி படம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சிரித்து மகிழ வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் எடுக்கப்படுகிற படம். படிப்பறிவில்லாத பாலாஜி சக்திவேல், முனீஷ்காந்த் கைக்கு ஒரு பழைய கேமரா கிடைக்கிறது. அதை வைத்துக் கொண்டு அவர்கள் செய்யும் கலாட்டாக்கள்தான் படம். பாலாஜி சக்திவேல், முனீஸ்காந்த் இருவரும் கதை நாயகர்களாக நடித்திருக்கிறார்கள். படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் சென்னையில் நிறைவு பெற்றது. இப்படம் முழுக்க முழுக்க ஒரு பிரமாண்ட செட் அமைத்து அதில் படமாக்கப்பட்டுள்ளது'' என்றார்.
இயக்குனராக இருந்து நடிகரான பாலாஜி சக்திவேல் இதுவரை குணசித்ர மற்றும் வில்லன் கேக்டர்களில் நடித்து வந்தார். முதன் முறையாக காமெடி கதை நாயகனாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.