உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'பகவந்த் கேசரி'யின் இன்ஸ்பிரேஷன் மட்டும்தான் 'ஜனநாயகன்'

'பகவந்த் கேசரி'யின் இன்ஸ்பிரேஷன் மட்டும்தான் 'ஜனநாயகன்'

தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள நடிகர் விஜய்யின் கடைசி படமாக 'ஜனநாயகன்' நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இப்படத்திற்கான முன்பதிவுகள் ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தவெக கட்சியினரே படத்தின் டிக்கெட்டுகளை மொத்தமாக வாங்கி வருதாகச் சொல்கிறார்கள்.

இதனிடையே, இப்படம் தெலுங்குப் படமான பாலகிருஷ்ணா நடித்த 'பகவந்த் கேசரி' படத்தின் ரீமேக் என்று சொல்லப்பட்டது. படத்தின் இயக்குனர் எச் வினோத், அந்தப் படத்திலிருந்து 60 சதவீதம் மட்டுமே ரீமேக் செய்யப்பட்டது என்று சொல்லி இருக்கிறார்.

படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா, 'பகவந்த் கேசரி' படம் இன்ஸ்பிரேஷன் மட்டும்தான். அந்தப் படத்தை இயக்கிய அனில் ரவிப்புடியுடன் கூடி ஆலோசனை நடத்தினோம். வேறு கதைக்களம், வேறு பிரச்சனை என படத்தின் கதையை முழுவதுமாக மாற்றியுள்ளோம். அது நிச்சயம் ரசிகர்களே எமோஷனலாக ரசிக்க வைக்கும்,” என்று தெரிவித்திருக்கிறார்.

பாலகிருஷ்ணா, காஜல் அகர்வால், ஸ்ரீலீலா நடித்து அனில் ரவிப்புடி இயக்கத்தில் தமன் இசையில் 2023ல் வெளிவந்த தெலுங்குப் படமான 'பகவந்த் கேசரி' சுமார் 60 கோடி செலவில் தயாராகி 130 கோடி வசூலித்து வெற்றி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !