பிளாஷ்பேக் : ஒரே படத்தில் விஜயகாந்த் ஜோடியாக நடித்த அக்கா- தங்கை
ADDED : 6 hours ago
நடிகைகள் பானுப்பிரியாவும், சாந்தி பிரியாவும் உடன்பிறந்த சகோதரிகள். இவர்கள் இருவரும் விஜயகாந்த் ஜோடியாக 'சிறையில் பூத்த சின்ன மலர்' என்ற படத்தில் நடித்தனர். இந்த படத்தில் விஜயகாந்த் இரட்டை வேடத்தில் நடித்ததால் ஒரு விஜயகாந்துக்கு பானுப்பிரியாவும், இன்னொரு விஜயகாந்த்துக்கு சாந்தி பிரியாவும் ஜோடியாக நடித்தனர்.
அமிர்தம் இயக்கினார். ஸ்ரீதிருமலா ஆர்ட் புரடக்சன் சார்பில் எம். கோபி என்பவர் தயாரித்தார். எஸ். மாருதி ராவ் ஒளிப்பதிவு செய்தார். இளையராஜா இசையமைத்திருந்தார். ஒரு விஜயகாந்துக்கு நடந்த அநீதியை இன்னொரு விஜயகாந்த் தட்டிக் கேட்பதுதான் படத்தின் கதை.
தமிழில் வெற்றி பெற்ற இந்த படம் தெலுங்கு மொழியில் ரவுடிலாகு ரவுடி' என்றும், இந்தியில் சக்மி ஷெர் என்றும் மொழி மாற்றம் செய்யப்பட்டது.