உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மணிரத்னம் படம் : இளமையான தோற்றத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி

மணிரத்னம் படம் : இளமையான தோற்றத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி

இயக்குநர் மணிரத்னம் மீண்டும் காதல் கதைக் களத்திற்கு திரும்பியுள்ளார். தற்போது அவர் இயக்கி வரும் புதிய படத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு மேற்கு வங்கத்தில் நடைபெற்று வருகிறது. புகழ்பெற்ற ஹவுரா பாலம் மற்றும் பல எழில்மிக்க இடங்களில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருவதோடு, ரசிகர்களுக்கு விஜய் சேதுபதி, சாய் பல்லவியின் முதல் தோற்றத்தையும் காட்டியுள்ளன. இதில் மிகவும் பேசப்படும் விஷயங்களில் ஒன்று விஜய் சேதுபதியின் புதிய தோற்ற மாற்றம்தான். பல ஆண்டுகளுக்குப் பிறகு, தனது வழக்கமான தாடி மற்றும் மீசை இல்லாமல் முழுமையாக க்ளீன் ஷேவ் செய்த புதிய லுக்கில் அவர் உள்ளார்.

சாய் பல்லவி மிகவும் எளிமையான ஸ்லீவ்லெஸ் சுடிதாரில் இப்படத்தின் காதல் கதைக்கு கச்சிதமாகப் பொருந்தும் வகையில் மிகவும் இளமையான தோற்றத்தில் பளிச்சிடுகிறார். விஜய் சேதுபதி, சாய் பல்லவியின் இந்த புதிய லுக் மற்றும் அவர்களுக்கிடையேயான கெமிஸ்ட்ரி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !