கட்டா குஸ்தி 2 ஓடிடி அப்டேட்
விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்ய லட்சுமி நடிப்பில் வெளியான ‛கட்டா குஸ்தி 2' படம், கடந்த ஜூலை 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. விளையாட்டு சார்ந்த நகைச்சுவை மற்றும் குடும்ப படமான இது உலகளவில் ரூ.55 கோடிக்கு மேல் வசூலித்து இந்தாண்டில் வெற்றி பட வரிசையில் இணைந்துள்ளது.
தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, இப்படம் வருகிற ஜூலை 30ம் தேதி அன்று நெட்பிளிக்ஸ் தளத்தில் டிஜிட்டல் முறையில் வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் இப்படத்தை நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீமிங் செய்து கண்டுகளிக்கலாம்.
செல்லா அய்யாவு எழுதி இயக்கியுள்ள இப்படத்தை ஐசரி கணேஷ் மற்றும் விஷ்ணு விஷால் இணைந்து தயாரித்தனர். ‛பேபி' ஜாரா ஜியானா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, கருணாஸ், முனீஷ்காந்த் மற்றும் காளி வெங்கட் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர். ஷான் ரோல்டன் இசையமைத்து இருந்தார்.