உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இசை என்பது தெய்வீக கலை, வாழ்வே ஆன்மிகம் : இளையராஜா பேச்சு

இசை என்பது தெய்வீக கலை, வாழ்வே ஆன்மிகம் : இளையராஜா பேச்சு

இளையராஜா இசையமைத்து எழுதிய பள்ளியெழுச்சி பாவைப் பாடல்கள் ஆல்பத்தை, பாடகர் சஞ்சய் சுப்பிரமணியன் பாடியுள்ளார். இந்த ஆல்பத்தின் வெளியீட்டு விழா சென்னை மியூசிக் அகாடமியில் நடந்தது. இதில் கலந்துகொண்டு இளையராஜா பேசியது...

நான் 1980களில் திருவண்ணாமலையில் மலை சுற்றுவதை வழக்கமாக வைத்திருந்தேன். நான் மலை சுற்றுவதை பார்த்து தான் அங்கே அதிகம் பேர் மலை சுற்றும் வழக்கம் வந்ததாக கூறுவார்கள். நான் உண்மையை தான் சொல்வேன். திருவண்ணாமலையில் நான் வலம் செல்லுவதை வைத்து, குஞ்சு சுவாமிகள், நான் பவுர்ணமியின் போது திருவண்ணாமலை சென்றால் தான் மழை வருகிறது என்று கூறினார்.

நான் திருவண்ணாமலையில் இறங்கும் போதே காலில் செருப்புகள் அணிவதை தவிர்த்துவிட்டேன். நான் அங்கே நடுப்பாதையில் தான் நடப்பேன், அப்போது என் கால்களில் முள் குத்தும் போது குஞ்சு சுவாமிகள், நான் செய்த பாவத்திற்கு அனுபவிப்பதாக கூறுவார். நான் அடிப்பாதையில் வலம் சென்று உட்காரும் போது அங்கே இருக்கின்ற லிங்கம் மற்றும் நான் ஆகியோர் மட்டும் அமர்ந்திருப்போம். அப்போது நான் தனியாக அமர்ந்திருக்கும் போது மாணிக்கவாசகம் பாடிய பாடலை நினைத்து பார்ப்பேன். அங்கிருந்து நான் வீட்டிற்கு வந்து 3 மாதங்கள் என்னால் கால் எடுத்து வைக்க முடியவில்லை. அங்கிருந்து வந்த பிறகு 3 மாதங்கள் கழித்து ஒருநாள் வீட்டில் எழுந்து உட்கார்ந்த போது தான் பாடிக்கிடைத்த பரம்பொருளே என்ற பாடல் எனக்குள் வந்தது. இந்த பாடல் நான் எழுதிய தமிழா என எனக்கே தோன்றியது. அது இறைவன் கொடுத்தது. இசை என்பதே தெய்வீக கலை.' என்று பேசினார்.

உங்களை பொறுத்தவரை ஆன்மிகம் என்றால் என்ன என தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு, என்னை பொறுத்தவரை ஆன்மிகம் என்பது தனியாக என்றில்லை, வாழ்வே ஆன்மிகம் தான்...' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !