சினிமாவில் அடுத்து களம் இறங்கும் காமெடியன்கள்
தமிழ் சினிமாவில் காமெடி பஞ்சம் தலைவரித்து ஆடுகிறது. கவுண்டமணி, செந்தில், விவேக், வடிவேலு காமெடிக்கு வயிறு வலிக்க சிரித்தவர்கள். இப்போது சிரிக்க வாய்ப்பு இல்லாமல் தவிக்கிறார்கள். காமெடி நடிகர்களான சந்தானம், சூரி உட்பட பலர் ஹீரோவாகிவிட்டார்கள். இதனால், யோகிபாபு காட்டில் மழை. அவருக்கு அடுத்து வந்த புகழ் போன்றவர்கள் ஜொலிக்கவில்லை.
இந்நிலையில், 'அன்பே டயானா' படத்தில் நடித்த பரிதாபங்கள் கோபிக்கு மவுசு கூடியுள்ளது. அந்த படத்தில் அவர் கேரக்டரும், அவர் காமெடியும் பேசப்பட, இப்போது 5 படங்களில் அவர் காமெடியனாக நடித்து வருகிறாராம். இன்னும் சிலர் கதை சொல்லியிருக்கிறார்கள். பரிதாபங்கள் கோபி, சுதாகர் ஆகியோர் யுடியூப்பில், ரீல்சில் பிரபலமானவர்கள். அவர்களை பல லட்சம் பேர் தொடர்கிறார்கள். அவர்கள் காமெடிக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கிறது.
அதனால் அவர்களை சினிமாகாரர்கள் பயன்படுத்த தொடங்குகிறார்கள். சமீபத்தில் வந்த 'இதயம் முரளி' படத்தில் சுதாகர் நடித்து இருந்தார். அவரையும் அடுத்த படங்களில் சிலர் புக் செய்துள்ளார்கள். இன்னொரு யுடியூப் பிரபலம் டிராவிட்டுக்கும் வாய்ப்புகள் வருகிறதாம். யோகிபாபு கடும் பிஸியாக இருப்பதாலும், அவருக்கான காமெடி வறட்சியாக இருப்பதாலும் புதுமுகங்களை அறிமுகப்படுத்த பலர் நினைக்கிறார்கள். அந்தவகையில் பரிதாபங்கள் கோபி, சுதாகர், டிராவிட் உட்பட பலர் புது ரத்தங்களாக இந்த ஆண்டில் பிரபலமாகி வருகிறார்கள்.