2031ல் விஜய், உதயநிதி, தனுஷ் போட்டி?
நடிகர் விஜயை தொடர்ந்து விரைவில் தனுஷ் அரசியலுக்கு வருவது உறுதி என்று அவருடைய ஆதரவாளர்கள் அடித்து சொல்கிறார்கள். அவரின் நெருங்கிய நண்பர்களும் அதை ஆமோதிக்கிறார்கள். அதற்கேற்ப அவரின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் இருந்தன. இந்த பிறந்தநாளை கிட்டத்தட்ட மாநாடு மாதிரி அவர் கொண்டாடினார். அதில் அவரது பேச்சும் அரசியல் தலைவர் மாதிரியே இருந்தது.
அதை தொடர்ந்து பிறந்தநாள் அன்று சென்னை போயஸ்கார்டன் வீட்டு மாடியில் இருந்தபடியே ரசிகர்களை சந்தித்து வாழ்த்துகளை பெற்றார். இதுவரை அவர் நான் அரசியலுக்கு வரமாட்டேன் என சொல்லவே இல்லை. அவர் அப்பா உள்ளிட்ட குடும்பத்தினரும் அரசியல் குறித்து விளக்கமாக சொல்லவில்லை. அவர் இலக்கு 2031 தேர்தல் என்பதால் மெதுவாக கட்சி பணிகளை தொடங்குவார்.
அவருக்கு அரசியல் யோகம் இருக்கிறது. 2031 தேர்தலில் அவருக்கும் விஜய், உதயநிதிக்கும் இடையே போட்டி இருக்கும் என சில ஜோதிடர்கள் சொல்லி இருக்கிறார்கள். அந்த நம்பிக்கையில் அவர் அரசியலுக்கு வர இருக்கிறார். அதை புரிந்துகொண்ட அவரின் ரசிகர் மன்ற நிர்வாகிகள், தனுஷ் உருவத்தை பொறித்த வெள்ளை சட்டை அணிந்து வருகிறார்கள். இதற்குமுன்பு இளைஞரணி சிம்பலை உதயநிதி அணிந்து வந்தார். விஜய் அரசியலுக்கு வந்தபோது புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டார் விஜய் உருவம் பொறித்த வெள்ளை சட்டை அணிந்தனர். இப்போது அந்த பாலிசியை தனுஷ் ரசிகர் மன்ற நிர்வாகிகளும் பின்பற்றுகிறார்கள். அடுத்தடுத்த கூட்டம், அறிவிப்புகளின் தனுசின் அரசியல் திட்டம் இன்னும் வெளிப்படையாக தெரிய வரும் என்கிறார்கள்.