ராஷி கண்ணா மனதில் ஆழமாக பதிந்த ரஜினியின் வார்த்தைகள்
தமிழில் 'இமைக்கா நொடிகள்' படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ராஷி கண்ணா. அதனைத் தொடர்ந்து 'அடடங்கமறு', 'அயோக்யா', 'அரண்மனை 3', 'அரண்மனை 4' என தமிழில் சீரான இடைவெளிகளில் படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர் எதிர்பாராத வாய்ப்பாக, 'டிராகன்' பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 'தர்மன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த படப்பிடிப்பில் நடிகர் ரஜினியுடன் பேசிய போது, நடிகர்கள் என்பவர்கள் கைதிகளைப் போல என்று அவர் கூறிய வார்த்தைகள் தனது மனதில் ஆழமாக பதிந்துள்ளதாக ராஷி கண்ணா கூறியுள்ளார். புகழின் உச்சத்தில் இருப்பவர்கள் தங்களது சுதந்திரத்தை இழக்க நேரிடும் என்ற யதார்த்தமான உண்மையை ரஜினிகாந்தின் அந்த வார்த்தைகள் தனக்குப் புரிய வைத்தது என்றும், பிரபலமாக இருப்பதன் பின்னணியில் இருக்கும் அழுத்தத்தை அது உணர்த்தியதாகவும் கூறியுள்ளார்.