உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜெயசூர்யாவின் 'ஆபரேஷன் ட்ரால்' படப்பிடிப்பு நிறைவு

ஜெயசூர்யாவின் 'ஆபரேஷன் ட்ரால்' படப்பிடிப்பு நிறைவு


மலையாளத்தில் பிரபல இசையமைப்பாளராக அறியப்படும் ரதீஷ் வேகா, தற்போது இயக்குனராக உருவெடுத்து 'ஆபரேஷன் ட்ரால்' என்கிற படத்தை இயக்கி வருகிறார். ஜெயசூர்யா இப்படத்தில் கதாநாயகனாக அதிரடி படை வீரராக நடிக்கிறார். ரித்திகா சிங் கதாநாயகியாக நடிக்கிறார். ஜம்மு காஷ்மீரின் டிரால் பகுதியில் இந்திய ஆயுதப்படைகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு தேசிய புலனாய்வுப் படமாக இது உருவாகியுள்ளது.

இதன் படப்பிடிப்பு கேரளா, கோவை, புதுடில்லி, குலு, மணாலி, முசோரி மற்றும் லடாக் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !