உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'டிசி' : 4 நாட்களில் 50 கோடி வசூல்

'டிசி' : 4 நாட்களில் 50 கோடி வசூல்


அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி, சஞ்சனா மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் 'டிசி'. படம் வெளியான நான்கு நாட்களில் 50 கோடி வசூலைக் கடந்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள படம். 'ஏ' சான்றிதழ் பெற்ற படமாக இருந்தாலும் இப்படம் இளம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றதால் இப்படியான வசூலைப் பெற்றுள்ளது.

படத்தின் வெற்றியின் காரணமாக மீண்டும் இந்தக் கூட்டணிக்கு தயாரிப்பாளர் வாய்ப்பளிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்த வருடத்தில் இயக்குனராக இருந்து கதாநாயகனாக மாறிய அபிஷன் ஜீவிந்த் நடித்த 'வித் லவ்' படம் 40 கோடி வசூலைக் கடந்து ஓடியது. அதற்கடுத்து கென் கருணாஸ் இயக்கி, நாயகனாக நடித்த 'யூத்' படம் 80 கோடி வசூலைக் கடந்தது.

தற்போது இயக்குனராக இருந்து நாயகனாக மாறியுள்ள லோகேஷ் படமும் 50 கோடி வசூலைக் கடந்துள்ளது. இதற்கு முன்பு எந்த ஒரு வருடத்திலும் இப்படி நடந்ததில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !